வருங்கால வைப்புநிதி பெறுவதில் மாற்றம்

சேலம்:சேலம், துணை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மிக பெரிய சேவையை செய்து வருகிறது. குறிப்பாக, ஐந்து கோடிக்கும் மேலான தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம், தொழிலாளர்களுக்கு தேவைப்படும் போதோ (அ) முதிர்வு பெற்ற பின், அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. எலக்டரானிக் முறையில், தொழிலாளர் கணக்கில், பண பரிவர்த்தனை செய்யப்படும்.இதை உறுதி செய்து கொள்ள, வங்கி சேமிப்பு புத்தக நகலில், அதிகாரிகள் ( பச்சை இங்க்) அட்டர்டேஷன் கையெழுத்திட்டு, வருங்கால வைப்புநிதி அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், பயன்படுத்த முடியாதபடி, கோடிடப்பட்ட வங்கி காசோலையில், தொழிலாளியின் பெயர், சேமிப்பு கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, அத்துடன், ஒரு ரூபாய்க்கான ரெவியன்யூ ஸ்டாப் ஒட்டிய கவரை இணைத்து, அனுப்ப வேண்டும்.வருங்கால வைப்புநிதியை வழங்கும் பழைய முறையை மாற்றி அமைக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published by neethiintheerppu

I am editor of NEETHIIN THEERPPU monthly magazine.this is crime

Discover more from Neethiin Theerppu

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading